×

இன்றைய துணை முதலமைச்சர் ஒருநாள் முதலமைச்சர் ஆவார் - அன்பில் மகேஷ் பேச்சு

 

இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் ஒருநாள் முதலமைச்சர் ஆவார் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாட திமுக தொண்டர்கள் முடிவு செய்துள்ளன. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, ரத்த தானம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திமுக தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதேபோல் தனது பிறந்த நாள் அன்று என்னனென்ன செய்ய வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கினார். அதனை பின்பற்றி திமுக தொண்டர்கள் பிறந்த நாளை கொண்டாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் ஒருநாள் முதலமைச்சர் ஆவார் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி தலைவனே இளம் தலைவனே என்ற பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதனை தெரிவித்தார்.