×

ஆசிரியை கொலை- குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்: அன்பில் மகேஸ்

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய ரமணியை பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் (நவம்பர் 14) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது. வேதனைக்குரிய நாளாக இன்று அமைந்துவிட்டது. தற்காலிக ஆசிரியை என்றாலும் எங்களது ஆசிரியை தான். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே வகுப்புகள் நடத்தப்படும். இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமானவர்களுக்காக யாரும் வாதாட வராதீர்கள். உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார்.