கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி - அமைச்சர் பங்கேற்பு!
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரித்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று (09.02.2024) சென்னை, தி.நகரில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சி.வெ. கணேசன் அவர்கள். தலைமையில், முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.