×


"நாளை மறுநாள் வேலைக்கு திரும்பும் சாம்சங் ஊழியர்கள்"- அமைச்சர் எ.வ.வேலு

 

சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு நாளை மறுநாள் பணிக்கு திரும்புவர் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு நாளை மறுநாள் பணிக்கு திரும்புவர். இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சுமுகமான சூழல் ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் செயலில் சாம்சங் நிர்வாகம் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கையில் தொழிலாளர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்கள். அதன்படி என் தலைமையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தொழிலாளர் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.