×

சாலையில் பேப்பர் சேகரிப்பவரை வீட்டுக்கு அழைத்து சென்று அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல்

 

சென்னையில் சாலையோரம் பேப்பர் சேகரிக்கும் ராஜா என்ற நபருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேலை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(22.07.2024) இன்று, சென்னை கிண்டியில் காலை நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தபோது, தெருவோரம் காகிதம் எடுத்து பிழைப்பவர் திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் அமைச்சரை பார்த்து வணக்கம் தெரிவித்தார். உடனே அவரை அழைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராஜாவை அருகில் அழைத்து விசாரித்தபோது, அவர் அவரது ஏழ்மை நிலைமையை விளக்குகியுள்ளார்.

உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவருடைய வாகனத்திலே தம்முடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று குளிக்க சொல்லி, உடை மற்றும் உணவு வழங்கி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனை பணியாளர் பணியை வழங்கி உதவி செய்துள்ளார்.