×

நாடார் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும்- மனோ தங்கராஜ்

 

உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள யூஜிசிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மதுரை நாகமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் வஞ்சகம் செய்து, அந்த மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். நாடார் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும்.

தமிழ்நாட்டில் தான் குறைந்த இடைவெளியில் பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ளன. தமிழ்நாட்டில் 72% பெண்கள் உயர் கல்வி பயில்கிறார்கள். அமேசான், பிளிப்கார்ட் போல் நாமும் தொழிற்துறையில் வேகமாக செயல்பட்டு வளர்ச்சியடைய வேண்டும். நாடார் சமுதாயத்தில் இருந்து 3 பேர் திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அரசியலில் ஒதுங்கியிருந்தால் யாருக்கும் எதுவுமே கிடைக்காது எனவே அனைவரும் அரசியல் பங்கேற்று அதிகாரத்திற்குள் வர வேண்டும்.தமிழ்நாடு அரசு கொடுக்கும் 28% ஜிஎஸ்டி வரி  மத்திய அரசு பகிர்ந்தளிப்பதில் குறைவாகவே வழங்கி வருகிறது” என்றார்.