×

"அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இஸ்ரோவில் இருக்கிறார்கள்"- ஆளுநருக்கு அமைச்சர் பதிலடி

 

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 அரசு பள்ளிகளை சேர்ந்த 900 மாணவர்கள், 1,189 மாணவிகள் என மொத்தம் 2,089 மாணவ, மாணவிகளுக்கு  1 கோடியே 69,640 மதிப்பில் விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் பொன்முடி வழங்கினார். 

விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என்று சிலபேர் கூறி வருகின்றனர். ஆனால் உயர்கல்வியில் தமிழ்நாட்டில் உள்ளதை போல எந்த மாநிலத்திலும் இல்லை என்பதை நிரூப்பித்து காட்டியுள்ளோம். கல்வி வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் திராவிட மாடல் ஆட்சி தான் காரணம், காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிமுகத்திய ஒரே முதல் மாநிலம் தமிழகம் தான். விளையாட்டு துறையிலும்  சிறப்பாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தின் கல்வி தரம் பன்னாட்டு அளவில் திராவிட மாடல் ஆட்சியில் வளர்ந்து வருகிறது, கல்வி என்பது ஏட்டு சுரைக்காய் ஆக இருக்க கூடாது பன்முகத்திறனை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் கல்வி தரம் சரியில்லை என ஆளுநர் கூறுகிறார். உயர்கல்வியில் பாடத்திட்டத்தின் தரம் எப்படி இருக்கிறது என மாணவர்களே கூறுகின்றனர். கல்வியை அறிவியல் ரீதியாக வளர்க்க வேண்டுமென முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்து கூறியுள்ளளார். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரு மொழிக்கல்வி கொள்கை மூலமாக தமிழகத்தில் கல்வி அறிவு மிகச்சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது, முதலமைச்சர் அடிக்கடி எண்ணிக்கை உயர கூடாது தரம் உயர வேண்டுமென கூறிக்கொண்டிருப்பதால் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே தமிழகத்தின் கல்வி சிறப்பாக் வளர்ந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்தான் வீரமுத்துவேல் இஸ்ரோவில் இருக்கிறார். அன்றிலிருந்து  நமது கல்வி தரம் உயர்ந்துள்ளது என்பதற்கு உதாரணம். உலகளவில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. கல்வி திட்டத்தில் எந்த குறையும் இல்லை. இன்னும் வளர்க்க வேண்டுமென கூறியுள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.