×

"போலீசார் பிடியில் இருந்து தப்பிக்கும் ரவுடிகளை சுட்டு தான் பிடிக்க வேண்டும்"- அமைச்சர் ரகுபதி 

 

போலீசாரிடமிருந்து ரவுடிகள் தப்பித்து போகும் போது சமயங்களில் சுட்டு தான் பிடிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலை செய்த நபர்கள் தான் பிடிக்கப்பட்டுள்ளனர். மாயாவதியும், ஆம்ஸ்ட்ராங்கும் எங்களுக்கு தோழமை தான், வேண்டாதவர்கள் அல்ல. உண்மையான குற்றவாளிகளை தான் போலீஸார் பிடித்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடும் போது, குற்றவாளிகளை சுட்டுத்தான் பிடிக்க வேண்டியுள்ளது. அவசியம் இன்றி சுட வேண்டிய அவசியமில்லை. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளோம். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் யார் மீது அண்ணாமலைக்கு சந்தேகம். அண்ணாமலை விவரங்களை சொன்னால் விசாரிக்க தயாராக உள்ளோம்


விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுகவும் வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை, பாமகவும் பணம் கொடுக்கவில்லை. மக்கள்தான் வாக்கு செலுத்தி எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அதிமுகவின் வாக்குகள் பாமகவுக்கு கிடைக்கும் என்று அக்கட்சியினர் நினைத்தனர் ஆனால் அது நடக்கவில்லை, அதிமுகவின் வாக்குகள் எங்களுக்கு தான் கிடைத்துள்ளது” என்றார்.