×

திருமாவளவன் மிரட்டுகிறாரா? எங்களை யாரும் மிரட்ட முடியாது- அமைச்சர் ரகுபதி

 

எங்களுடைய நண்பர்கள் யாரும் எங்களை மிரட்ட முடியாது. திமுகவை எந்த கட்சியும் மிரட்ட முடியாது, மிஷா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள். திமுக எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல என  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “சிறைக் கைதிகளை விடுவிப்பதில் ஆளுநர் காலம் தாழ்த்திருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பது. அதுவே நம்முடைய கருத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம். காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தில் எதையும் முறையாக செய்யாமல் அடிக்கல் நாட்டி விட்டு, நாங்கள் திட்டத்தை தொடங்கி விட்டோம் என்று சொல்வதால் மட்டும் பயனில்லை. இந்தத் திட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலம் எடுப்புகள் முடிந்த பிறகு தான் கால்வாய்கள் வெட்ட முடியும். நிலங்களை எடுத்த பிறகுதான் அதற்கான முறையான பணிகளை தொடங்க முடியும், ஏற்கனவே அதற்கான அடிப்படையான பணிகளை செய்யவில்லை. அதை தமிழ்நாடு அரசு இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது.

திமுகவை திருமாவளவன் மிரட்டுவதாக எல்.முருகன் கூறுகிறார். எங்களுடைய நண்பர்கள் யாரும் எங்களை மிரட்ட முடியாது. திமுகவை எந்த கட்சியும் மிரட்ட முடியாது, மிஷா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள். திமுக எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல. எங்களை நம்பி வந்தவர்களை நாங்கள் மோசம் செய்ய மாட்டோம். அவர்களுக்கு உண்மையான நண்பராக இருப்பவர் தான் முதலமைச்சர், தோழமைக் கட்சிகளுக்கான மரியாதையை இந்தியாவிலேயே எந்த கட்சியும் கொடுக்காத வகையில் மரியாதை கொடுப்பவர் நம்முடைய முதலமைச்சர். அதனால் திருமாவளவன் எங்களை மிரட்ட மாட்டார்” எனக் கூறினார்.