×

ஆகஸ்ட் 19ல் துணை முதல்வராகிறாரா உதயநிதி?

 

 

வரும் 19ஆம் தேதிக்கு பின்னர் உதயநிதியை துணை முதலமைச்சர் என கூறவேண்டும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி, அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்று ஒரு ஆண்டுக்கு மேலான நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் ராமநாதபுரத்தில் தமிழ்ப்புதல்வன் திட்ட விழாவில் கலந்து கொண்டபின் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், உதயநிதி துணை முதல்வர் ஆவார். துணை முதல்வர் உதயநிதி என கூறிவிட்டு, 19 ஆம் தேதிக்குப் பின் தான் அப்படி கூறவேண்டும் என்றார்.