×

“தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் தங்கு தடையின்றி விநியோகம்”- அமைச்சர் சக்கரபாணி

 

பருப்பும், பாமாயிலும் தீபாவளிக்குத் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக ஒரு நாளிதழில் வந்த தவறான செய்திக்கு ஏற்கனவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தீபாவளிக்குத் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என்று 14/10/24 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளேன். கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் என்னுடைய அறிக்கையைப் படிக்காமல் பருப்பு விநியோகம் தொடர்பாக அறிக்கை அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்கள். அவரின் பார்வைக்கு என்னுடைய அறிக்கையை அனுப்பியுள்ளேன்.

அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20751 மெட்ரிக் டன்னில் நேற்று (15.10.2024) வரை 9461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.20408000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 9783000 பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன. மீதி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.