முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் அமைச்சர்கள் ஆய்வு!
Updated: Feb 11, 2024, 16:45 IST
சென்னை வெளிவட்ட சாலை, முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (11.2.2024), சென்னை வெளிவட்ட சாலை, முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை (Idle Parking for Omni Buses) நானும், மாண்புமிகு அமைச்சர் திரு.சிவசங்கர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தோம்.