திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் தகவல்
திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தீப திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தீப திருவிழா வருகிற 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: திருவண்ணாமலை தீப திருவிழா மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவையில் இருந்து வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை - தி.மலை இடையே 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு கூறினார்.