×

“நிதிப்பற்றாக்குறைனு சொன்னா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க”... அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்ட உதயநிதி

 

சென்னையைப் பொறுத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்குதான் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நிதி பற்றாக்குறை காரணமாக பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு ஏற்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சென்னையை பொறுத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்குதான் முக்கியத்துவம் வழங்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதிகளை மழைநீர் வடிகால் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆய்வு செய்ய உள்ளோம். மழை தொடர்பான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 

மெட்ரோ ரயில் பணிகளால் மக்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளோம். அமெரிக்காவில் இருந்து மழைநீர் வடிகால் தொடர்பான ஆய்வு கூட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று கேட்டறிந்தார்” என்றார்.