×

 "சைக்கிள் ஓட்டி சென்னையை ரசிக்கலாம்"... ராகுலுக்கு ஸ்டாலின் அழைப்பு

 

சைக்கிள் பயணம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய  வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, சகோதரரே, எப்போது சென்னையில் நாம் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம் என நகைச்சுவையாக கேள்வி எழுப்பி இருந்தார்.


இந்நிலையில் ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வரலாம். ஒன்றாக சைக்கிளிங் சென்று சென்னையை சுற்றுவோம் சைக்கிள் ஓட்டிய பிறகு என் வீட்டில் சுவையான தென்னிந்திய மதிய உணவை ருசிப்போம். உங்களுக்கு தர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் என்னிடம் இன்னும் நிலுவையில் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.