×

"மாற்றம் ஒன்றே மாறாதது. WAIT AND SEE" அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு முதல்வர் பதில்

 

2030-க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய பயணம் மேற்கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். அமெரிக்க பயணம் வெற்றிகரமானதாக அமையும் என நம்புகிறேன். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்துள்ளன. நாளை முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ, சிகாகோவிற்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க செல்கிறேன்.


2030-க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய பயணம் மேற்கொள்கிறேன். 3 ஆண்டுகளில் ரூ.9.99 லட்சம் கோடி மதிப்பில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 18.89 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ரூ.3,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன. ரூ.9,99, 093 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும்” என்றார்.

நடிகர் ரஜினியும், அமைச்சர் துரைமுருகனும் நீண்ட கால நண்பர்கள். அவர்கள் இருவருமே இதைச் சொல்லிவிட்டனர். அதை நீங்கள் இருவருமே இதைச் சொல்லிவிட்டனர். அதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக்கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு "மாற்றம் ஒன்றே மாறாதது. WAIT AND SEE" என பதில் அளித்தார்.