×

தேர்தலுக்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு- மு.க.ஸ்டாலின்

 

மக்களவை தேர்தல் வருவதற்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தணிகாச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களவை தேர்தல் வருவதற்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு. பெட்ரோல்,டீசல் விலையும் குறைக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை. இந்தியா கூட்டணி கட்சிகள் எண்ணிக்கை இன்னும் உயரும்” என்றார்.

டெல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை ரூ.400 வரை குறையும். எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியத் தொகையை மத்திய அரசு கொடுத்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி வரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மக்களவை மற்றும் 5 மாநில தேர்தலுக்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.