×

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரம்- ஜி.கே.மணிக்கு முதல்வர் பதில்

 

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் வன்னியர் தனி இடஒதுக்கீடு வழங்கமுடியாது என முதல்வர்  மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

வன்னியர்களுக்கு 10.5% உள்-ஒதுக்கீடு கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் சட்டமன்றத்தில் பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி வலியுறுத்திய நிலையில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க உங்கள் கூட்டணி அரசிடம் சொல்லுங்கள் என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “கூட்டணி கட்சிகளோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குபிறகுதான் இதை அமல்படுத்த முடிய்ம். ஏற்கனவே பீகாரில் இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்கமுடியும். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். இது குறித்து இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும். தமிழக அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தை பாமக ஆதரிக்க வேண்டும்." என்றார்.