×

திராவிட நல் திருநாடுன்னு சொன்னா உங்க நாக்கு தீட்டாகிடுமா?"- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

 

அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞரால் பட்டிதீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார். ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பென்முடி. அறிவுமுடிதான் பொன்முடி. தடை என்றால் அதை உடை இதான் நம்ம ஸ்டைல். ஆகையால் நம்மளை அதிக்க சக்திக்கு பிடிக்கவில்லை. சிலருக்கு திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே அலர்ஜி. திராவிட நல் திருநாடு-ன்னு சொன்னா உங்க நாக்கு தீட்டாகிடுமா? இப்படி பாடினா சிலருக்கு வாயும், வயிரும் எரியும்னா திரும்ப திரும்ப பாடுவோம்.

திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல். திராவிடம் ஒரு காலத்தில் இன பெயரா, மொழி பெயரா இருந்தது. இன்று அரசியல் பெயரா உருவெடுத்துள்ளது. 'கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்' என்ற கலைஞரின் வரியை நினைவுப்படுத்துகிறேன்.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னேற திராவிட இயக்கம்தான் காரணம். திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கு சம நீதி, சமூக நீதியை உறுதி செய்யும். அனைத்து துறை, அனைத்து மாவட்ட வளர்ச்சியோடு அனைத்து சமூக வளர்ச்சி இருக்க வேண்டும்” என பேசினார்.