×

துறையும் வளர்ந்திருக்கு, அமைச்சரும் வளர்ந்திருக்கிறார்! உதயநிதியை புகழ்ந்த மு.க.ஸ்டாலின்

 

விளையாட்டுத் துறையும் வளர்ந்திருக்கு, அமைச்சரும் வளர்ந்திருக்கிறார் என உதயநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.


சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டி நிறைவு விழா நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-ல் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என 254 பதக்கங்களை பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த சென்னை அணிக்கு கோப்பையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் 2024  நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசு வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 நிறைவு விழாவில், தொடர்ந்து 3 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு நினைவு பரிசு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  பின்னர் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 நிறைவு விழாவில், 5 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு நினைவு பரிசு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


பின்னர் நிகழ்ச்சிய்ல் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “விளையாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி, துணை முதலமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களான உங்கள் பங்கும் உண்டு. விளையாட்டுத் துறையும் வளர்ந்திருக்கு, துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார். விளையாட்டுத்துறையை சிறப்பாக கவனித்து, இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் தம்பி உதயநிதி; பெற்றோர்களே... உங்க பசங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தா Encourage பண்ணுங்க. அதுவே அவங்களுக்கு உற்சாகம் அளிக்கும்” என்றார்.