×

இன்று மாலைக்குள் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களின் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படும்

 

இன்று மாலைக்குள் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களின் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் திட்ட வாக்குறுதியை திமுக அரசால் நிறைவேற்றவேற முடியாது எனக் கூறினார்கள். வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். மகளிர் உரிமைத் திட்டம் எந்த சின்ன புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்தது. காய்ச்சல் போனாலும் தொண்டை வலி உள்ளது. இந்த வாரம் முழுவதும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொன்னாலும் உங்களை சந்திக்காமல் என்னால் இருக்க முடியவில்லை, தொண்டை வலி இருந்தாலும் தொண்டில் தொய்வு இருக்க கூடாது. 

என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்தேன். உங்களை பார்க்கும் போது உடல் வலி குறைந்து மகிழ்ச்சி மேலிடுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது. சொன்னதை செய்வோம் - அதன் அடையாளமே மகளிர் உரிமைத்தொகை திட்டம். சொன்னதை செய்ததால் உங்கள் முன் தைரியமாக நிற்கிறேன்.

இன்று மாலைக்குள் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களின் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படும்.  தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு ரூ.1,00 உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்படுகிறது. பலர் முடியாது என கூறிய இந்த திட்டத்தை இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 30-ஆக உயர்ந்துள்ளது. உரிமைத் தொகை இரண்டாம் கட்ட விழாவில், புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் இந்த மாதம் முதல் ரூ.1,000 பெறப்போகின்றனர். தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை இன்று மாலைக்குள் அனைவருக்கும் வரவு வைக்கப்படும். மக்களின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவன் நான், ஊருக்காக திராவிட மாடல் அரசு கூடி இழுத்த தேர்” என்றார்.