×

பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம்- மு.க.ஸ்டாலின்

 

1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு கட்டிடங்கள் மற்றும் சிதிலமடைந்துள்ள பழைய கட்டிடங்கள் சென்னை, தஞ்சை உள்ளிட்ட குடியிருப்புகள் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த அரசு பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைக்க கவனம் செலுத்துகிறது. சென்னை மற்றும் இதர நகரங்களில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் சில நீண்ட கால பயன்பாடு மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக சிதலம் அடைந்த குடியிருப்புகளை முறையாக கணக்கெடுத்து அவற்றை மறு கட்டுமான முடிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. 

 மறுக்கட்டுமாணத்திற்கு பின் குடியிருப்பு புதுமையான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் பழைய குடியிருப்புகளின் முன்னர் வாழ்ந்த குடும்பங்களுக்கும் இதே திட்டப்பகுதிகளின் அருகாமையில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்தி 93 ஆயிரத்து 891 அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் 28,643 குடியிருப்புக்கு சிதலமடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும்

இதன் முதற்கட்டமாக 2024- 25 ஆம் ஆண்டில் சென்னை மாநகரில் கிழக்கு கடற்கரை சாலை கொடுங்கையூர் வ உ சி நகர் போன்ற திட்டப் பகுதிகள் மற்றும், தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் உள்ள திட்டப்பகுதியில் உள்ள 6746 அடுக்குமாடி குடியிருப்புகள் 1146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுக்கட்டுமான மற்றும் புதிய திட்ட பகுதிகள் கட்டுமானம் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிவித்தார்.