×

அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என ஒரு கூட்டம் புரளியை கிளப்பியது! பதிலடி கொடுத்த முதல்வர்

 

அம்மா உணவகங்களுக்கு கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு,  நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு,  நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது.