×

லேட்டரல் என்ட்ரி நியமன முறை ரத்து சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி- ஸ்டாலின்

 

சமூக நீதிக்கு வெற்றி! நமது இந்தியா கூட்டணியின்கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, இடைநுழைவு ஆட்சேர்ப்பை(Lateral Entry Recruitment) ஒன்றிய அரசு திரும்பப்பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக நீதிக்கு வெற்றி! நமது இந்தியா கூட்டணியின்கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, இடைநுழைவு ஆட்சேர்ப்பை(Lateral Entry Recruitment) ஒன்றிய அரசு திரும்பப்பெற்றுள்ளற்கு. ஒன்றிய பாஜக அரசு பல்வேறு வடிவங்களில்இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சி செய்யும் என்பதால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். 

இட ஒதுக்கீட்டுக்குத் தன்னிச்சையாகவிதிக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு உடைக்கப்படவேண்டும். மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும்ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடுமுழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதுஅவசியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டது. அத்துடன் இந்த நியமன முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்றும், அப்படி இடஒதுக்கீடு பின்பற்றப்படுமே ஆனால் 23 பணியிடங்கள் ஓ.பி.சி, பி.சி வகுப்பினர் மட்டுமே பணியமர்த்தப் படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதன் மூலம் யுபிஎஸ்சி தேர்ச்சி பெறாதவர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படலாம் என்பதாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மாநில அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் என யார் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பதாலும்  கடும் எதிர்ப்பு எழுந்தது.  இதையடுத்து மத்திய அரசில் இணைச் செயலாளர்களை நேரடியாக நியமிக்கும் லேட்டரல் என்ட்ரி  முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.