×

விமான சாகச நிகழ்ச்சியை மெய்மறந்து பார்த்த மு.க.ஸ்டாலின், உதயநிதி

 

சென்னை மெரினாவில் நடக்கும் விமான சாகச நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் கண்டுகளித்தனர்.


 
இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று (அக்.6) காலை 11 மணிக்கு தொடங்கியது. விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிட லட்சக்கணக்கானோர் மெரினா நோக்கி  படையெடுத்தனர். பயிற்சி பெற்ற ஆகாஷ் கங்கா குழுவினர் நீல நிற பாரசூட் மூலம் வானில் இருந்து குதித்து சாகசம் செய்தனர். 2000 அடி உயரத்தில் இருந்து பாரசூட் வீரர்கள் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

சுட்டெரிக்கும் வெயிலிலும் குடை பிடித்தபடி விமான சாகச நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர். பாதுகாப்புக்காக மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுகோய், ரபேல் உள்ளிட்ட 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன தேஜஸ், டகோட்டா, ஹார்வர்ட், ரஃபேல் உள்ளிட்ட விமானங்களும் வானில் சீறிப் பாய்கின்றன