சென்னையில் மிதமான மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
Nov 7, 2024, 08:46 IST
சென்னை வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை தொடரும் என்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.