×

ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாய், தந்தையிடம் 3 மணி நேரம் விசாரணை

 

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது ஸ்ரீமதியின் தாய், தந்தையிடம் 3 மணி நேரம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார்‌ தீவிர விசாரணை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து 17ம் தேதி பள்ளியில் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டு பள்ளி மற்றும் பள்ளி பேருந்துகள்‌ தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு  போலீசார்கள் இதுவரை சுமார் 900க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் ஸ்ரீமதியின் தாய்மாமன் செந்தில் முருகன் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் ஸ்ரீமதியின் தாய் செல்வி  தந்தை ராமலிங்கம் ஆகியோர்களுக்கு நேற்று உன் தினம் நேரில் ஆஜராக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் செம்மண் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீமதியின் தாய் மற்றும் தந்தை ராமலிங்கம் ஆகிய  இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகினர்.சிறப்பு புலனாய்வு போலீசார் பிரிவு போலீசார் ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் தந்தை ராமலிங்கம் உள்ளிட்டோரிடம் தனித்தனியே கலவரத்திற்கான காரணம் யூட்யூபில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு அனுப்பி வைத்தனர்.