×

Hukum பாடலுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி..!

 

எம்.எஸ். தோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதையொட்டி எம்.எஸ். தோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.இதைத் தொடர்ந்து தோனியின் மனைவி சாக்ஷி தனது கணவருக்கு கேக் ஊட்டிவிட்டு, அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.இவர்களுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். தோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்.எஸ். தோனிக்கு ரவீந்திர ஜடேஜா,சி.எஸ்.கே. அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இவர்கள் தவிர சமூக வலைதளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹுகும் பாடலுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது