×

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் போற்றி வணங்குகிறோம் -  அண்ணாமலை 

 

தென்னகத்தின் போஸ் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு  @DrPramodPSawant அவர்கள் மற்றும்  @BJP4Tamilnadu  மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து,  மரியாதை செலுத்தி வணங்கினோம்.