×

சமூக சீர்திருத்தவாதி முத்துராமலிங்கத்தேவர் வழியில் பயணிப்போம் - தினகரன் ட்வீட் 

 

முத்துராமலிங்கத்தேவர் வழியில் எந்நாளும் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு, இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் தியாகி பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை விழா இன்று.


சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம்,  விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்கள் என தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்ற சமூக சீர்திருத்தவாதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வழியில் எந்நாளும் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.