தேவர் பெருமகனாரின் குருபூஜை - வானதி சீனிவாசன், கே.எஸ்.அழகிரி ட்வீட்
Oct 30, 2023, 09:30 IST
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதுத்தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று முழங்கிய தேசபக்தரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை அனுப்பியவருமான வீரதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை இன்று.இந்நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.