×

இனி 3 நாட்களுக்கு மட்டுமே நாகை- இலங்கை கப்பல் சேவை

 

குறைந்த பயணிகள் முன்பதிவு காரணமாக நாகை- இலங்கை இடையிலான கப்பல் சேவை இனி 3 நாட்களுக்கு மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை கடந்த வருடம் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 16 ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மிகுந்த ஆர்வத்துடன் கப்பலில் பயணிக்க சுற்றுலாவாசிகள், தொழிலதிபர்கள் வருகை தந்தனர். சாதாரண வகுப்பில் பயணிக்க 5000 ரூபாய் எனவும், பிரீமியம் இருக்கையில் பயணிக்க 7500 ரூபாய் எனவும் டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இனி வாரத்தில் செவ்வாய், வியாழன்,ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இருக்கும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பயணிகள் முன்பதிவு செய்திருந்தாலும்,  காலநிலை மாற்றத்தாலும் கப்பல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.