×

இன்று தொடங்கவிருந்த நாகை இலங்கை கப்பல் சேவை ஒத்தி வைப்பு...! 

 

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 2023 அக்டோபர்  14ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தக்  கப்பல் இயற்கை சீற்றத்தை காரணம் காட்டி 20ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என   கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய அரசு இதன் அடிப்படையில்  தமிழக அரசுடன் இணைந்து டெண்டர் விடப்பட்டது. இதனால் மீண்டும் கப்பல் போக்குவரத்து  மே 13ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என தெரிவித்தது.   இதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் தயாராகி நேற்று முன்தினம் மே 10ம் தேதி பிற்பகல் சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.  அங்கு கப்பல் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு உட்பட  சில  பணிகள் நடைபெறுகிறது.

இதன் பிறகு    மே 11ம் தேதி பிற்பகல்   நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர வேண்டிய சிவகங்கை கப்பல் மே12ம் தேதி பிற்பகலுக்கு வந்து சேரும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சோதனை ஓட்டமாக காலை 8 மணிக்கு புறப்படும் கப்பல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தை  சென்றடையும். அதே போல் இலங்கையில் இருந்து பிற்பகல்  2 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். இந்த சோதனை ஓட்டத்திற்கு பிறகு  நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை இன்று மே13ம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட உள்ளது.அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே10 ம் தேதி நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரவில்லை.

இந்நிலையில் இன்று தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து  மே 17ம் தேதிக்கு கப்பல் போக்குவரத்து சேவை  ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.  கப்பல் பயணத்தை நம்பி இலங்கைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.