×

“சுனாமி அலைபோல் பாஜகவில் உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள்”- நமீதா

 

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தான் என்று  நடிகையும் பாஜக உறுப்பினருமான நமீதா தெரிவித்துள்ளார்.

ஒன்றிய  உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவின்  60-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெசப்பாக்கத்தில்  அமித்ஷாவின்  பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பாஜக உறுப்பினர் சேர்க்கை  நடைபெற்றது. இதில் பாஜக உறுப்பினரும் திரைப்பட நடிகையுமான நமீதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் பொதுமக்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நமீதா, “ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவின்  பிறந்தநாளை நாங்கள் கொண்டாடி வருகிறோம், பாரதிய ஜனதா கட்சி உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியாக இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க ஒரு சுனாமி அலை போல மக்கள் தங்களை பாஜகவில் இணைத்து கொள்கிறார்கள், இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகத்தில் அனைவருக்கும்  இடம்  இருக்கிறது, இன்றைய சூழ்நிலையில் அரசியலுக்கு நிறைய பேர் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு தான் வருகிறார்கள், எனவே விஜய் அரசியலுக்கு வருவது சந்தோஷம்தான்” எனக் கூறினார்.