×

“உதயநிதி கிள்ளுக்கீரை அல்ல... விரைவில் துணை முதல்வராவார்”- நாஞ்சிக் சம்பத்

 

விரைந்து வேகமாக ஸ்டாலின் சுமையை பகிர்ந்து கொள்வார், விரைவில் உதயநிதி துணை முதல்வராக பதிவு ஏற்பார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகாது. இந்தியா பிளவுபடும். இது முட்டாள் தனமானது. ஹரியானாவில் தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிராவில் ஏன் நடத்தவில்லை. ஒரே தேர்தல் சாத்தியமில்லை‌. சீமான் ஒரு பாஜக கைக்கூலி. உதயநிதி கிள்ளுக்கீரை அல்ல. நீட்டுக்கு எதிரான தலைவர்.‌ அதனால் விரைந்து வேகமாக ஸ்டாலின் சுமையை பகிர்ந்து கொள்வார். விரைவில் உதயநிதி துணை முதல்வராக பதிவு ஏற்பார்.

விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். மது ஒழிப்பு மாநாடு, மகக்தான வெற்றி பெறும். 2 லட்சம் பெண்கள் திரட்டுகிறார். இந்தியா கூட்டணி மட்டுல்ல அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருமா. அரசுக்கும் இந்தியா கூட்டணிக்கும் உராய்வு ஏற்படுத்த திருமா விரும்பவில்லை. மாநில சுயாட்சி டெல்லியில் எதிரொலிப்பது போல, மது விலக்கு தேசிய அளவில் எழுச்சியாக அமையும்” என்றார்.