கஸ்தூரியை கைது செய்த காவல்துறை, ஓவியாவை ஏன் கைது செய்யவில்லை? - நாராயணன் திருப்பதி கேள்வி
Nov 21, 2024, 14:00 IST
நடிகை கஸ்தூரியை துடி துடித்து கைது செய்த தமிழக அரசு, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை அவதூறாக பேசிய சமூக செயற்பாட்டாளர் ஓவியாவை ஏன் கைது செய்யவில்லை? என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பது கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக சொல்லி துடி துடித்து நடிகை கஸ்தூரியை கைது செய்து நீதியை நிலை நாட்டியதாக மார் தட்டிக்கொண்ட தமிழக அரசு, நம்முடைய தமிழ் மக்களான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை அவதூறாக, கேவலமாக, தரம்தாழ்ந்து பேசிய சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்று அழைக்கப்படும் ஓவியாவை கைது செய்யாமல் அமைதி காப்பது ஏன்?