உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் புகழை போற்றி வணங்குகிறேன் - ஈபிஎஸ்
Feb 6, 2024, 14:48 IST
உழவர் பெருந்தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடுவின் புகழை போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், பெரும் போற்றுதலுக்குரிய உழவுத் தொழிலை அங்கீகரிக்க பாடுபட்டு, தமிழகத்தில் உழவர் இயக்கத்தை கட்டமைத்து உருவாக்கி, வேளாண் பெருமக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை தலைமை ஏற்று வழி நடத்தி,
வேளாண்மையில் பாகுபாடின்றி "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்னும் உயரிய குணம் மேலோங்க காரணமான உழவர் பெருந்தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்தநாளில் அவரின் சாதனைகளையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.