×

"பிரஜ்வால் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்க" -  தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்!

 

 பிரஜ்வால் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய  தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 


 பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக பகீர் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. எச்.டி. ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீதும் ஏற்கனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.   பாலியல் புகாருக்கு உள்ளான எச்.டி.  ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ஜெர்மனி தப்பி சென்றுள்ளார். எச்.டி. ரேவண்ணா கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மூத்த சகோதரர் ஆவார். 

இந்நிலையில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பிரஜ்வால் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய கர்நாடக காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஆபாச வீடியோக்கள் வெளியானது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை 3 நாள்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.