"பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், சமத்துவம், சுதந்திரம் வழங்குவோம்" - அன்புமணி வலியுறுத்தல்!!
Jan 24, 2024, 13:38 IST
உரிமை, அதிகாரம், அங்கீகாரம், சமத்துவம் ஆகிய அனைத்தையும் வழங்க இந்த நாளில் உறுதியேற்போம் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.