எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் மோதிக்கொண்ட அதிமுக நிர்வாகிகள்!
திருநெல்வேலி அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலியில் அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கள ஆய்வு கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், பொருப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை செய்யவில்லை என கொள்கை பரப்புச் செயலாளர் புகார் கூறியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கேமரா TRIPOD-ஐ பிடுங்கி நிர்வாகிகள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா முறையாக செய்யவில்லை என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் முத்தையா கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. எஸ்.பி.வேலுமணி கூறிய போதிலும் நிர்வாகிகள் அதனை கண்டுகொள்ளாமல் மோதலில் ஈடுபட்டனர்.