×

பயணிகள் அதிர்ச்சி...!வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு!

 

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு கிடந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு கிடந்ததாக புகார் எழுந்துள்ளது. உணவில் வண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதனிடையே அது வண்டு இல்லை எனவும், சீரக மசாலா எனவும் பயணிகளிடம் ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  
சீரக மசாலாவில் எப்படி தலை மற்றும் கால்கள் இருக்கும் என அதிகாரியிடம் பயணிகள் கேள்வி எழுப்பினர். தரமான உணவுகளை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீடியோ ஆதாரத்துடன் பயணிகள் புகார்  அளித்துள்ளனர். வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு கிடந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.