×

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இளைஞர் பலி!

 

திருநெல்வேலி அருகே வீட்டின் பின்புறம் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் அன்பரசன் (33). இவர் கூடங்குளம் அணுமின் நிலைய தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  மாலை வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக வெளியில் சென்றவர் இரவு எட்டு மணி வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது அண்ணன் முருகன் அவரது உடன்பிறந்த சகோதரரான அன்பரசனை பல இடங்களில் தேடிச் சென்றபோது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் மின் தாக்குதல் காரணமாக பிணமாக உயிரிழந்தது தெரியவந்தது. 
 
முருகன்  அன்பரசனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது அவரையும் மின்சாரம் தாக்கி உள்ளது. தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் கூடங்குளம் காவல்துறையினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து மின்சாரத்தை நிறுத்திய பின் மின்சார தாக்குதலால் உயிரிழந்த அன்பரசன் உடலை உடற்கூறாய்வுக்காக நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மின்சாரம் தாக்கி லேசான காயமடைந்த முருகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.