×

#Justin ஆ ராசாவின் வேட்பு மனு நிறுத்திவைப்பு!

 
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அக்கட்சியின் சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் ஆ. ராசா.
இவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மத்திய அமைச்சர் எல் முருகனும், அதிமுக கூட்டணியின் சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று நடந்து வரும் வேட்பு மனு பரிசீலணையில் திமுக வேட்பாளர் ஆ ராசாவின் வேட்பு மனுவை நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆ ராசா தாக்கல் செய்த வேட்பு மனுவில் சில பிழைகள் இருப்பதாக கூறி வேட்பு மனுவை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.