×

உதகை மலை ரயில் நவ. 16ம் தேதி வரை ரத்து!

 

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் நவ. 16ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது.  அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதனால் உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.   இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை  சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். 

இந்நிலையில் மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் நவ. 16ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவைக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளது. பருவமழை நீடிக்கும் என்ற தகவலைத் தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.