நிர்மலா சீதாராமன் பார்வையிட இருந்த எல்.இ.டி திரை அகற்றம்
Updated: Jan 22, 2024, 09:39 IST
காமாட்சியம்மன் கோயிலில் எல்.இ.டி. திரை அகற்றப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த சூழலில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் எல்இடி திரை அமைத்து கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பில் காண ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை அகற்றப்பட்டது. அயோத்தி கோயில் திறப்பு விழாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து காணும் வகையில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. திரை அகற்றப்பட்டுள்ளது.