×

போலீசாருடன் தகராறு செய்த  நிவேதா பெத்துராஜ் - கார் டிக்கியில் இருந்தது என்ன? 

 

தனது காரை பரிசோதனை செய்யவிடாமல் காவல்துறையிடம்  நடிகை நிவேதா  பெத்துராஜ் வாக்குவாதம் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. 

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ,திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்களில்  நடித்தார் .