×

“இதுமட்டுமே அந்த பெண்ணுக்கும் எனக்குமான தொடர்பு”.. நிவின்பாலி பரபரப்பு பேட்டி

 

படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லைக் கொடுத்ததாக பெண் ஒருவர் அளித்த புகாருக்கு நடிகர் நிவின்பாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழில் நேரம், ரிச்சி ஆகிய படங்களில் நடித்தவர் நிவின் பாலி. இவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரணம் சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவின் பாலி மீது நெரியமங்கலத்தை சேர்ந்த பெண் புகார் அளித்த நிலையில், அவர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நிவின் பாலி மீதான வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நிவின்பாலி, “நான் இங்கு தான் இருக்கிறேன். எங்கும் செல்லப்போவது இல்லை. மீடியாக்கள் இதை அவசியமின்றி பூதாகரமாக்கும் முன்பு, இந்த விவகாரத்தில் உண்மைகளை கண்டறிய முயற்சிக்கும் படி வேண்டுகிறேன். இது என் கோரிக்கை மட்டுமே. இயலவில்லை என்றாலும் கவலையில்லை, நான் போராட உள்ளேன். சம்பந்தப்பட்ட பெண் முன்பு ஓட்டலில் என்னை சந்தித்ததாகவும், நான் அவர்களை தாக்கியதாகவும் புகார் கொடுத்தார்கள். இப்போது வேறு ஒரு கதையை புகாராக கொடுத்துள்ளார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவருடன் பணம் செலவிட்டு படம் செய்துள்ளேன். அதுமட்டும் தான் அவருக்கும், எனக்குமான தொடர்பு” என விளக்கம் அளித்த்ள்ளார்.