"என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை"- நிவின் பாலி
Sep 3, 2024, 21:01 IST
படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லைக் கொடுத்ததாக பெண் ஒருவர் அளித்த புகாருக்கு நடிகர் நிவின்பாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழில் நேரம், ரிச்சி ஆகிய படங்களில் நடித்தவர் நிவின் பாலி. இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகர் நிவின் பாலி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிவின் பாலி மீது நெரியமங்கலத்தை சேர்ந்த பெண் புகார் அளித்த நிலையில், அவர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நிவின் பாலி மீதான வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.