×

தங்கம் விலையில் மாற்றமில்லை!!

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.  கடந்த 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.  7ஆம் தேதி சென்னையில் ஆபரண  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. இதன் மூலம்  ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையானது.  

சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ. 49,200க்கும்,  ஒரு கிராம் ரூ. 6,150க்கும் விற்பனையாகி வருகிறது.