திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை
Nov 29, 2024, 21:00 IST
திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் நாகை, விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.